பூஜையுடன் ஆரம்பமாகிய கார்த்தியின் சர்தார் 2 !

பூஜையுடன் ஆரம்பமாகிய கார்த்தியின் சர்தார் 2 !

நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், ரத்ன குமார், நடிகர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஜூலை 15 ஆம் திகதி இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )