நீங்கள் அணியும் உடைகளில் ஸ்லிம்மாகத் தெரியணுமா ?

நீங்கள் அணியும் உடைகளில் ஸ்லிம்மாகத் தெரியணுமா ?

ஒரு சில பெண்கள் கொஞ்சம் குண்டானவர்களாக இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட சில உடைகள் அணியும்போது இன்னும் அதிகமாக குண்டாகத் தெரிவார்கள். இது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

அவ்வாறு கவலைப்படும் பெண்கள் அவர்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்தாலும் குண்டாக தெரியாமல் இருக்க, சில ஃபெஷன் குறிப்புகள் இதோ…

ஃபிட்டான ஆடை

அண்மையில் வைரலாகி வரும் லூஸ் ஃபிட் ஆடைகள் பெரும்பான்மையானோரின் தெரிவாக இருக்கிறது. இந்த வகை ஆடைகள் குண்டாக இருப்பவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். எனவே டைட் ஃபிட் ஆடைகளை தெரிவு செய்யலாம்.

அடர் நிற ஆடைகள்

அடர் நிற ஆடைகளும் உங்களை ஒல்லியாகக் காட்டும்.

செங்குத்து ஆடைகள்

கோடு போட்ட ஆடைகள் எப்பொழுதும் பார்க்க அழகாகத் தெரியும். செங்குத்தாக கோடுகள் போட்ட ஆடைகள் உங்களை கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். அதுவே கிடைமட்டக் கோடுகள் கொண்ட ஆடைகள் உங்களை குண்டாகக் காட்டும்.

ஹீல்ஸ் அணியுங்கள்

குண்டாக இருக்கும் பெண்கள் ஹீல்ஸ் அணிந்தால் ஒல்லியாகத் தெரிவார்கள்.

பெல்ட் அணியலாம்

குண்டாக இருப்பவர்கள் வெஸ்டர்ன் ஆடைகள் அணியும்போது பெல்ட்டுடன் அணிந்தால் பார்க்க ஒல்லியாகத் தெரிவார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )