பொருளாதார நெருக்கடியில் தேவையறிந்து உதவியது இந்தியா !
இலங்கை சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை பெரும் நிதி உதவியை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு இலங்கை எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு திரும்பிய போதிலும் அதிகரித்த கடன்கள் காரணமாகவும் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாததாலும் இலங்கை சில வருடங் களுக்கு முன்னர் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
எரிபபொருள் நெருக்கடி மக்களை பாதித்தது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
இதன் போது இந்தியா பாரிய நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியது.
தக்கதருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகள், ஆதரவு காரணமாக
இலங்கையால் இந்த நெருக்கடியை கையாள முடிந்த்தாகவும் தெரிவித்த ரவூப் ஹக்கீம் எம்.பி, இதற்காக இலங்கை என்றும் இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டதாக காணப்படு
மென தெரிவித்துள்ளார்.
திருச்சவிமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கையில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடவையாக நரேந்திரமோடி இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவில் யார் அதிகாரத்துக்கு வந்துள்ளார் என்பதை விட ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.