வருமான வரி அதிகாரிகளாக இனங்காட்டி பணம் அறவிடுவோரிடம் ஏமாற வேண்டாம் !
தேசிய வருமான வரித் திணைக்கள அதிகாரிகளென தம்மை இனங்காட்டும் சிலர்,வர்த்தகர்களிடம் பணம் பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதென தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடைமுறைகள் எதுவும் இல்லை என்பதால்,பணம் வழங்கி ஏமாற வேண்டாமென வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு,தேசிய வருமான வரித்திணைக்களம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் வருமான வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பணத்திற்கு தாம், எந்த வகையிலும் பொறுப்பில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தேசிய வருமான வரி ஆணையாளர் நாயகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், வரி அறவிடும் நடவடிக்கைகள் உரிய வகையில் எழுத்து மூலம் அறிவித்து உத்தியோகபூர்வமாக மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.