தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமா ?
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.
அந்த கலந்துரையாடலில் எட்டப்படும் தீர்மானத்திற்கமைய, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி மற்றும் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலம் தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க முன்னதாகத் தெரிவித்திருந்தார்.