இலங்கை மகளிர் அணி வெற்றி

இலங்கை மகளிர் அணி வெற்றி

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி நேற்று (20) பங்களாதேஷ் மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 112 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் 17.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )