25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது.

இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், “பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )