வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்றுக்குட்டி

வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்றுக்குட்டி

ராஜஸ்தான் மாநிலம் கரவுளி பகுதியில் எருமை மாடு ஒன்று பால் போன்ற வெள்ளை நிறத்தில், அழகாக ஒரு குட்டியை ஈன்றுள்ளது. பார்க்க பசு கன்று போல தோற்றமளிக்கும் இந்த கன்றுக்குட்டியின் உடலில் ஒரு சிறு அளவில் கூட கருப்பு நிறம் இல்லை.

தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் இந்த எருமை கன்றை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமாக திரண்டனர். அவர்கள் இந்த கன்றுக்குட்டியை அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

இதுபற்றி எருமையின் உரிமையாளர் நீரஜ்ராஜ்புத் கூறுகையில், “கடந்த 17-ந்திகதி அதிகாலை 4 மணிக்கு எருமை கன்றுக்குட்டி ஈன்றது. அப்போது வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக்குட்டியை பார்த்ததும் நாங்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தோம்.

கன்றுக்குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருக்கிறது. அதன் தாய் குட்டியை மிகவும் அரவணைத்து பார்த்து கொள்கிறது” என்றார்.

இந்த நாட்டு இன எருமை மாடு தற்போது தான் முதன் முறையாக குட்டியை ஈன்றுள்ளது. மரபணு கோளாறு காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )