தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார். இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரசாரத்தின்போது, நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பா ? வழக்கறிஞர் கமலா ஹாரிசா ? என்ற முழுக்கத்துடன் கமலா அணி பிரசாரத்தை தொடங்கியது.
பிரசாரத்தில், பெண்களின் கருத்தடை உரிமை, ஜனநாயகத்தை டிரம்பிடமிருந்து காப்பது உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய கமலா திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் பைடன் இறங்கியுள்ளார்.