ரணிலா? சரத் பொன்சேகாவா ?
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கவுள்ளது.
இந் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் தவிசாளரருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாக்காவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கமும் இணைந்து ஜனாதிபதி வேடப்பாளராக அறிவிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் jvpயின் வாக்குகளை குறைப்பதற்காகவே சரத் பொன்சேகாக்காவை ஜனாதிபதி வேடப்பாளராக அறிவிக்கவுள்ளதாகவும் சரத் பொன்சேகாக்கா ஜனாதிபதி வேட்பாளராக வர அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அரசியல் முக்கிய புள்ளிகள் மத்தியில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
ரணில் விக்ரமசிங்க அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவியினை நோக்கி காய்களை நகர்த்துவதாக தெரியவருகின்றது. இதற்கு அமைவாக மெகா கூட்டணி ஒன்றினை உருவாக்குவதற்கு ரணில் தரப்பில் பல விடயங்கள் மறைமுகமாக இடம்பெறுவதாக உயர் மட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா முன்வைத்த விமர்சனங்களை கருத்திற் கொண்டு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி மற்றும் சகல பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.