“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்

“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று (02) காலமானார். 

அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. 

குட்டிமணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 

அதைத்தொடர்ந்து இராக்கதன், மேதகு -2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.

இந்நிலையில் 28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று (02) அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மறைந்த இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )