இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா உடன்பாடு

இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா உடன்பாடு

இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

 குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை  (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Studio Room), ஒளிப்பதிவு அறை (Studio Room)  , மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 

அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )