பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு – சஜித்துக்கிடையில் சந்திப்பு

பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு – சஜித்துக்கிடையில் சந்திப்பு

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து – பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (07) கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.

அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே த

னதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )