காசாவில் மீறப்பட்ட போர் விதிமுறைகள் ரபா நகரில் டாங்கிகள் முன்னேற்றம் !

காசாவில் மீறப்பட்ட போர் விதிமுறைகள் ரபா நகரில் டாங்கிகள் முன்னேற்றம் !

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில், அங்கு அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டிருப்பதாக பலஸ்தீன அக திகளுக்கான ஐ.நா. நிறு வனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி குற்றம் சாடியுள்ளார்.

கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஆரம்பமான இந்தப் போரில் அண்மைய தினங் களாக இஸ்ரேலியப் படை பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நா வினால் நடத்தப்படும் பாடசாலைகள் மற்றும் நிலையங்கள் மீது தாக்கு தல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறான தாக்குதல் கள் கிட்டத்தட்ட தினசரி இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக் கும் லசரினி, ‘பலஸ்தீன அகதிக ளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆறு பாடசாலைகள் உட்பட, கடந்த 10 நாட்களில் குறைந்தது எட்டு பாடசா லைகள் தாக்கப்பட்டுள்ளன’ என்று எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார். ‘

இந்தப் போர் காசாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் குழந்தைப் பருவம் மற்றும் கல்வியை பறித்துள்ளது. பாடசா லைகள் இலக்காகக் கூடாது’ என்று வலியுறுத்திய அவர், ‘காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறப் பட்டுள்ளது’ என்றார்.

எனினும் காசாவில் இஸ்ரேல் 286 ஆவது நாளாக நேற்றைய தினத் திலும் தனது கடுமையான தாக்கு தல்களை தொடர்ந்தது.

மத்திய காசாவில் இஸ்ரேலியப் படை நடத் திய செல் குண்டு தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங் கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் அல் சாவியா சிறு நகரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற் கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அல் நுசைர் அகதி முகாமில் இருக்கும் அப்துல் அசாம் பள்ளி வாசல் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல் லப்பட்டுள்ளார். அல் புரைஜ் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 7 பேர் காயமடைந்திருப்பதோடு 4 சிறுவர்கள் காணாமல்போயிருப் பதாக பலஸ்தீன செய்தி நிறுவன மான வபா குறிப்பிட்டுள்ளது.

தவிர இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலும் ரபா நகரின் கிழக்கு பகுதியிலும் வீடுகள் மீது குண்டு களை வீசியதாக செய்தி வெளியாகி யுள்ளது. ரபா நகரில் மேற்கு பக்கத்தில் ஆழ ஊடுருவும் இஸ்ரேலிய டாங் கிகள் மேட்டு நிலம் ஒன்றில் நிலை கொண்டிருப்பதாக அங்குள்ள குடி யிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு பல சுரங்கப்பாதைகளை கண் டுபிடித்ததாகவும் பல துப்பாக்கிதா ரிகளை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு ரபாவில் இஸ் ரேலிய படைகள் மீது நேற்று மோட்டார் குண்டுகளை வீசியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஒன்பது மாதங்க ளுக்கு மேலாக போர் நீடிக்கும் நிலையிலும் ஹமாஸ் தலைமை யிலான பலஸ்தீன போராளிகளி னால் இஸ்ரேலிய படைகள் மீது டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் அதே போன்று அவ்வப்போது இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசி தாக் குதல் நடத்த முடிந்துள்ளது.

வடக்கு காசாவில் போர் உக்கிரம் அடைந்ததை அடுத்து ஒரு மில்லிய னுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் ரபாவில் அடைக்கலம் பெற்றிருந்தனர். எனினும் இங்கு கடந்த மே மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து பெரும்பாலான பலஸ்தீனர் கள் மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டனர். காசாவில் கடந்த 24 மணி நேரத் தில் குறைந்தது 54 பேர் கொல்லப் பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,848 ஆக அதிகரித் திருப்பதோடு மேலும் 89,459 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக ளும் ஸ்தம்பித்துள்ளன. ஐ.நா பாது காப்புச் சபையில் நேற்று முன்தினம் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர், ‘வரலாற்றில் அதிகம் ஆவணப்படுத்தப்பட்ட இனப்படு கொலை ஒன்றே காசாவில் நிகழ்ந்து வருகிறது’ என்றார்.

இதில் உரையாற்றிய ஐ.நா வுக்கான சீன தூதுவர் பு கொங், காசாவில் உடன் போர் நிறுத் தம் ஒன்றை ஏற்படுத்தவும், இரு நாட்டுத் தீர்வை செயற்படுத்த வும் வலியுறுத்தியதோடு, காசா மக்கள் மீது நடத்தப்படும் கூட்டுத் தண்டனையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் பலஸ்தீன நாடு ஒன்றை நிராகரிக்கும் தீர்மானம் இஸ்ரே லிய பாராளுமன்றத்தில் நேற்று அதிக பெரும்பான்மை வாக்குகளு டன் நிறைவேற்றப்பட்டது. வல துசாரி கட்சிகள் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வின் கூட்டணி அரசைச் சேர்ந்தவர்களால் கொண் டுவரப்பட்ட இந்தத் தீர் மானத்திற்கு பாராளு மன்றத்தில் 68 ஆதரவு வாக்குகள் கிடைத்திருப் பதோடு எதிராக ஒன்பது வாக்குகள் மாத்திரமே பதி வாகியுள்ளன.

இஸ்ரேலிய பாராளு மன்றத்தின் இந்தத் தீர்மா னம் இரு நாட்டுத் தீர்வை எதிர்ப்பதாக உள்ளது என்று பலஸ்தீன தேசிய முன்முயற்சியின் செயலா ளர் நாயகம் முஸ்தபா பார் கூத்தி தெரிவித்துள்ளார். ‘இந்தத் தீர்மானம் பலஸ் தீ னர்க ளுட ன ா ன அமைதியை நிராகரிப்பதாகவும் ஒஸ்லோ உடன்படிக்கையின் மர ணத்தை உத்தியோகபூர்வமாக அறி விப்பதாகவும் உள்ளது’ என்று அவர் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள் ளார். 1993 இல் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்கள் இடையே கைச்சாத்தான ஒஸ்லோ உடன்ப டிக்கை, இஸ்ரேலிய நாட்டுடன் பக்கத்து பக்கத்தில் வாழும் சாத்தி யமான மற்றும் இறைமை உடைய பலஸ்தீன நாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கிறது. காசாவில் கடந்த ஒன்பது மாதங் களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்தை நெருங்கி இருப்பதோடு இஸ்ரேலிய முற்று கையால் அங்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காசா மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு காசா கரையில் இஸ்ரேல் 230 மில்லியன் டொலர் செலவில் அமைத்த தற்காலிக துறை முகத்தை அது அகற்றியுள்ளது.

இந்தத் தற்காலிக துறைமுகத்தை இயக்குவதில் கடல் கொந்தளிப்பு மற்றும் ஏற்பாட்டியல் பிரச்சினைகள் என்று பல சவால்களை சந்தித்த நிலையிலேயே அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )