கொட்டாவையில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம் !
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் கொட்டாவ – லியங்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த வாகனம் அந்தப் பகுதியிலுள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனம் கடந்த பெப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரினால் வாகன திருத்துமிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லை எனவும் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.