விரைவில் ‘தங்கலான் 2’

விரைவில் ‘தங்கலான் 2’

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி, மாளவிகா, பசுபதி உள்ளிட்டோர் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15ஆம் திகதி வெளியானது.

இத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

விக்ரம் நடித்த திரைப்படங்களிலேயே முதல் நாள் 26.44 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுதான்.

தங்கலானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் விக்ரம் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

விரைவில் தங்கலான் 2 இற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )