இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : இங்கிலாந்து குழாம் அறிவிப்பு !

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : இங்கிலாந்து குழாம் அறிவிப்பு !

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் 14 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முடிவுற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது விரலில் காயத்திற்கு உள்ளான அரம்பத் துடுப்பாட்ட வீரர் சக் கிரோலி நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் டிலியன் பென்னிங்டனும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப்பின் ஓர் அங்கமாகவே இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 4 ஆவது இடத்தில் இருப்பதோடு இங்கிலாந்து அணி 6 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து குழாம்:

பென் ஸ்டொக்ஸ் (தலைவர்), கஸ் அட்கின்சன், ஷொயைப் பஷீர், ஹரி ப்ரூக், ஜோர்டன் கொக்ஸ், பென் டக்கட், டான் லோரன்ஸ், ஒல்லி பொப், மத்தியு பொட்ஸ், ஜோ ரூட்ஸ், ஜெம்மி ஸ்மித், ஒல்லிஸ்டொன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வூட்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )