கேக்கிற்காக பாராளுமன்றில் கத்திக்குத்து சண்டை

கேக்கிற்காக பாராளுமன்றில் கத்திக்குத்து சண்டை

கேக்கிற்காக பாராளுமன்றில் கத்திக்குத்து சண்டை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற உணவகத்தின் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழியர்களில் ஒருவர் மற்ற ஊழியரை கத்தியால் குத்த முயன்றதாகவும், கேக் துண்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி சணடையாக சென்றதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதையடுத்து, பொலிஸார் உள்ளிட்ட பாராளுமன்ற பாதுகாப்புப் படையினர் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர்.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )