குமார வெல்கமவுக்கு 3 மாத கால விடுமுறை
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு 3 மாத விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குமார வெல்கம சுகவீனமுற்றிருப்பதால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன், 3 மாதம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka