ஒன்பது இலட்சம் பேர் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை

peoplenews lka

ஒன்பது இலட்சம் பேர் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை

8 மில்லியன் பேர் இன்னமும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை

இலங்கையில் இதுவரை ஒன்பதுஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் இது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவின் இயக்குநர் வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார்.
12வயதிற்கு மேற்பட்ட 17.6 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் எனினும் நேற்றுவரை 16.7 மில்லியன் பேர் மாத்திரமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
95 வீதமானவர்கள் முதலாவது டோஸினை பெற்றுள்ளனர், 80 வீதமானவர்கள் பெற்றுக்கொண்டு;ள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
20வயதிற்கு மேற்பட்டவர்களில் 14.5 மில்லியன் பேர் பூஸ்டர் டோஸினை பெற தகுதியானவர்கள் ஆனால் 6.6 வீதமானவர்களே அதனை பெற்றுள்ளனர் அதாவது 44 வீதம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் மக்கள் பூஸ்டர் டோஸ்களை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர் என்ற கேள்விக்கு அவர்கள் கொவிட்டினை சாதாரணமாக கருதுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
60வயதிற்கு மேற்பட்டவர்களி;ல. 1.1மில்லியன் பேர் இன்னமும் பூஸ்டர் டோஸினை செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர் தொடர்ச்சியாக நினைவுபடுத்தியபோதிலும் இன்னமும் அவர்கள் அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வயதினரே பல நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய வயதினர் மத்தியில் பூஸ்டர் டோஸினை பெற்றுக்கொள்வது குறித்து காணப்படும் தயக்கம் பற்றி கரிசனை வெளியிட்டுள்ள மருத்துவர் இதன் காரணமாக முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட பிரஜைகளின் எண்ணிக்கை 2.7மி;ல்லியன் என மதி;ப்பிடப்படுகின்றது என குறிப்பிட்டு;ள்ள அவர் இவர்களில் 11 மில்லியன் பேர் இன்னமும் பூஸ்டர் டோசினை பெற்றுக்கொள்ள முயலவில்லை இது அச்சமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரகாலப்பகுதியில் உயிரிழந்த 202 பேரில்80 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவர்கள் ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More