“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்

peoplenews lka

“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று (02) காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. குட்டிமணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இராக்கதன், மேதகு -2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். இந்நிலையில் 28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று (02) அதிகாலை காலமானார்.

இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறைந்த இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Share on

சினிமா

peoplenews lka

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்...

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார். தனது 79 வயதில் அவர் காலமாகினார்... Read More

peoplenews lka

நல்ல கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்...

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து.. Read More

peoplenews lka

“அந்த மாதிரி படங்களில் நடிப்பது என்னுடைய கடமை”...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில்.. Read More

peoplenews lka

4 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து.. Read More