4 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்

peoplenews lka

4 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் இவர் இசையில் கமல்ஹாசன் எழுதிய பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் 'இனிமேல்' என்ற ஆல்பம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இசையில் மிகவும் ஆர்வமிக்கவர் ஸ்ருதிஹாசன்.

Reason behind Shruti Haasan, Santanu Hazarika's breakup

2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர். விருது வழங்கும் விழாக்களுக்கு எல்லாம் ஒன்றாக சென்றனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிடுவார். 4 ஆண்டுகள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த காதல் இப்பொழுது முறிவடைந்துள்ளது.

இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்தனர். ஸ்ருதிஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாந்தனுவுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தற்காலிகமாக சமூக வலைதளங்கலில் இருந்து ஒரு பிரேக் எடுத்துள்ளார். அவர் கடைசியாக பகிர்ந்த பதிவில் என்னை பற்றியும் , மக்களை பற்றியும் நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Share on

சினிமா

peoplenews lka

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்...

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார். தனது 79 வயதில் அவர் காலமாகினார்... Read More

peoplenews lka

நல்ல கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்...

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து.. Read More

peoplenews lka

“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்...

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார்.. Read More

peoplenews lka

“அந்த மாதிரி படங்களில் நடிப்பது என்னுடைய கடமை”...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில்.. Read More