கொவிட்-19 தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

peoplenews lka

கொவிட்-19 தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

கடந்த
3 ஆண்டுகளுக்கு முன்னர் கொவிட் 19 பெருந்தெற்று பரவல் சர்வதேச ரீதியில் அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த 2020 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி பிரகடனம் செய்திருந்த நிலையில், இந்த அவசர நிலை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவசரநிலை நிறைவுக்குக் கொண்டு வந்ததால், உலகளாவிய ரீதியில் சுகாதார அச்சுறுத்தலாக கொவிட் 19 நிறைவடைந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைடைந்ததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் நாளாந்தம் 6 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், அது ஆபத்தான நிலைமையல்ல என தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிதி கினிகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் வெள்ளிக்கிழமை (5) கொவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா
மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on

உள்நாடு

peoplenews lka

புங்குடுதீவு அகழ்வு பணிகள் நிறைவு...

யாழ்.புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று(02) அகழ்வுப் பணிகள்.. Read More

peoplenews lka

40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்.. Read More

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

இலங்கை ஊடகங்களை எச்சரிக்கிறது NPP...

இலங்கை ஊடக நிறுவனங்களை பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய மக்கள் சக்தி (NPP) எச்சரித்துள்ளது... Read More