மே தின பேரணிகளால் கொழும்பில் குவிந்த குப்பை

peoplenews lka

மே தின பேரணிகளால் கொழும்பில் குவிந்த குப்பை

நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02) காலை வரை அப்பகுதிகளில் பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன.

இன்று காலை முதல் நகர சபை ஊழியர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிய வந்துள்ளது.

அரசியல் கட்சிகள், கொழும்பு நகரை மையப்படுத்தி பல மே தின பேரணிகளை நேற்று (01) ஏற்பாடு செய்திருந்தன.

ஆனால் மே தி பேரணிகள் முடிவடைந்த பின்னர் கொழும்பில் சில இடங்களில் இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணியின் பின்னர், கட்சியின் ஆதரவாளர்கள் பொரளையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில்  குப்பைகளை வீசி சென்றுள்ளமை காணமுடிந்தது.

இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஹைட் பார்க் பகுதியில் நடைபெற்ற முன்னிலை சோசலிச கட்சியின் மே தின பேரணியின் பின்னர் அவர்கள் குப்பைகளை சுத்தம் செய்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர் அந்தப் பகுதியில் அதிகளவு குப்பைகள் குவிந்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி இடம்பெற்ற கொழும்பு ஏ.இ.குணசிங்க விளையாட்டு மைதானம் இன்று காலை நகர சபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் பிரதான மே தின பேரணி கொழும்பு தாமரை தடாக சுற்றுவட்டத்தில் இடம்பெற்றதுடன் பேரணியின் பின்னர் துப்புரவு செய்யும் பணிகளை அவர்களே செய்திருந்தனர்.

அதேநேரம் பாராளுமன்ற வாகன நிறுத்துமிடத்திலும் குப்பைகள் தேங்கி காணப்பட்டன.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More