எரிபொருள் விநியோகம் துரித கதியில்

peoplenews lka

எரிபொருள் விநியோகம் துரித கதியில்

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலதிக நேரச் செலவுகளைக் குறைப்பதற்காக கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் CPC மற்றும் CPSTL இயங்கவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அண்மைய விலை திருத்தத்தின் போது விலை குறைப்பு எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வினியோகத்தை வழங்காமையால் தற்போது பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

"எரிபொருள் நிலையங்களில் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தத்தின் பின்னர் நுகர்வோரின் உடனடி தேவை அதிகரித்தது மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு பங்களித்தன" என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More