இன்றைய Sri Lanka Cricket நிலவரம்

peoplenews lka

இன்றைய Sri Lanka Cricket நிலவரம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதற்கு முடிவு செய்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஷரித்த அசலங்க 91 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும், பத்தும் நிஷாங்க 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

269 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி சற்று முன்னர் வரை ஒரு ஓவர் நிறைவிற்கு விக்கெட் இழப்பின்றி எட்டு ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More