சமூக வலைத்தளங்கள் ஊடாக பல நிதி மோசடி சம்பவங்கள்

peoplenews lka

சமூக வலைத்தளங்கள் ஊடாக பல நிதி மோசடி சம்பவங்கள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் பொது மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பொது மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை அறியாதவர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும்
குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், அவற்றின் பிரதிகளுடன், வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம், 


விசேடமாக வங்கி கணக்கு தொடர்பில் குறுந்தகவல் ஊடாக பெறப்படும் OPT இலக்கத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் யாருக்கும் வழங்க வேண்டாம் மெலும் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் சார்பில் பொது மக்களிடம்
கோரிக்கை விடுக்கின்றேன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்,

இவ்வாறான மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள், எனவே இது போன்ற நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும், உங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களிடம் சிக்கி சொத்துக்களை இழக்க வேண்டாம் எனவும்

மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டினுள் 27 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும்
இந்த துப்பாக்கி பிரயோக சம்பங்கள் ஊடாக 19 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More