ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

peoplenews lka

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர். டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீரனாக, வனமகன் படத்தில் காட்டுவாசியாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ஜீனி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானது.

Sun News on X: "#CinemaUpdate | அர்ஜுனன் JR இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் ' ஜீனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ...

இதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். உண்மையில் அவர் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால் தான் தெரியும்.

அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. 60 கோடிக்கு மேல் ஜீனி படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Share on

சினிமா

peoplenews lka

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்...

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார். தனது 79 வயதில் அவர் காலமாகினார்... Read More

peoplenews lka

நல்ல கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்...

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து.. Read More

peoplenews lka

“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்...

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார்.. Read More

peoplenews lka

“அந்த மாதிரி படங்களில் நடிப்பது என்னுடைய கடமை”...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில்.. Read More