வணிகம் கொரோனா தடுப்பூசி பாலியல் வீரியத்தைக் குறைக்குமா?

peoplenews lka

வணிகம் கொரோனா தடுப்பூசி பாலியல் வீரியத்தைக் குறைக்குமா?

நாட்டில் தற்போது 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாலியல் சக்தி குறையும் என சமூக ஊடங்களில் வெளியான தகவல்களால் இளைஞர், யுவதிகள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை.
எனவே இலங்கையில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில பிரதேசங்களில் இளைஞர், யுவதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவலின் படி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் பாலியல் ரீதியான சக்தி குறைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இழக்கப்படும் எனக் கூறி இவ்வாறான பல்வேறு கதைகள் இளைஞர், யுவதிகளின் தலைக்குள் புகுத்தப் பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை. அது முற்றிலும் போலியானது.  எனவே இலங்கை யில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share on

மருத்துவம்

peoplenews lka

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!...

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது... Read More

peoplenews lka

குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்....

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்... Read More

peoplenews lka

சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்...

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் போது மீட்கப்பட்ட அதிசயிக்க வைக்கும் சிறுநீரக கல்.. Read More

peoplenews lka

பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?...

கொவிட் தடுப்பூசி - பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?.. Read More