குழந்தையை எப்படி தயார் செய்வது

peoplenews lka

குழந்தையை எப்படி தயார் செய்வது

நோய் தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு சிறுவயதிலிருந்தே ஒரு சில தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது மற்றொரு கொரோனா வைரஸ் வேரியண்ட்தான ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்கள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்கு தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.

இதுவரை பெரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கோவிட் தடுப்பூசி நிலையில், தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடலாம் என்று அரசு அங்கீகரித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தாமதிக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்

கொரோனா தொற்று பாதிப்பு பற்றி விவரம் அறிந்த குழந்தைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். எனவே, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்
கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு சிலர் செலுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு மருத்துவ காரணங்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு சில நோய்கள் அல்லது அலர்ஜி ஆகியவை இருந்தால் தடுப்பூசி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைக்கு தடுப்பு செலுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.

கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் மருந்துகளைத் தவிருங்கள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னரே ஒரு சில மருந்துகளை அவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, NASAIDs எனப்படும் ஸ்டீராய்டு அல்லாத anti-inflammatory மருந்துகள் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும். ஆனால், கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னரே மருந்துகளை கொடுக்க வேண்டாம். அதே போல, காய்ச்சல் மருந்துகளையும் ஊசி செலுத்தும்முன் கொடுக்க வேண்டாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்துகளை கொடுக்க வேண்டும்.

நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் ஆக்டிவான நிலை

குழந்தைக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு முன், அவர்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் நன்றாக தூங்குகிறார்களா, என்பது மட்டுமின்றி ஆக்டிவாக சுறுசுறுப்பாக செயல்படுவதையும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதையும் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசிக்கு முன்பு அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஊசியால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள வல்லுநர்கள் கூறும் சிறந்த வழிகள்!

 தடுப்பூசி செலுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படும்
தடுப்பூசி செலுத்திய இடத்தில் வலி, வீக்கம், ரத்தம் கட்டிக் கொள்ளுதல் உட்பட தசை வலி, ஜுரம் உள்ளிட்ட ஒரு சில பக்க விளைவுகள் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படுவது சாதாரணம் தான். இந்த அறிகுறிகள், குழந்தைகள் உடலில் வேலை தடுப்பூசி செய்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.

எமர்ஜென்சி சூழ்நிலைகள்

தடுப்பூசி செலுத்திய பின்பு உங்கள் குழந்தைக்கு தீவிரமான அலர்ஜி ஏதாவது தோன்றினால் இரண்டு மூன்று நாட்களுக்குள் ஜுரம் குறையவில்லை என்றால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

Share on

மருத்துவம்

peoplenews lka

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!...

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது... Read More

peoplenews lka

குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்....

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்... Read More

peoplenews lka

சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்...

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் போது மீட்கப்பட்ட அதிசயிக்க வைக்கும் சிறுநீரக கல்.. Read More

peoplenews lka

பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?...

கொவிட் தடுப்பூசி - பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?.. Read More