உங்களுக்கு ஓமைக்ரான் டெஸ்ட் தேவைப்படுமா

peoplenews lka

உங்களுக்கு ஓமைக்ரான் டெஸ்ட் தேவைப்படுமா

தொண்டை கரகரப்பு அல்லது வெறும் தொண்டைக் கட்டு இருக்கிறது, இருமலோ, சளித்தொல்லை, மூக்கொழுகல் அல்லது மூக்கடைப்பு போன்றவை ஓமைக்ரான் வைரஸ் இருப்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். இந்தியாவில் ஓமைக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பலருக்கும் இந்த குளிர் காலத்தில் தொண்டை கரகரப்பு, கட்டு, சளி, இருமல், மூக்கடைப்பு, ஜுரம் போன்றவை இருப்பது சகஜம், ஆனால் இவர்கள் தங்களுக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்வது அவசியமா என்ற கேள்வி எழுகிறது.

தொண்டை கரகரப்பு, வலிக்கு ஓமைக்ரான் சோதனை தேவையா

நீங்கள் வெளிநாடு, வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளவில்லை, ஆனால் தொண்டை கரகரப்பாக இருந்து கொண்டிருக்கிறது என்றால் உங்களுக்கு கொரோனா வேரியண்ட் ஆன ஓமைக்ரான் வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பார்க்க பரிசோதனை செய்து கொள்வது அவசியமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

தொண்டை கரகரப்பு அல்லது வெறும் தொண்டைக் கட்டு இருக்கிறது, இருமலோ, சளித்தொல்லை, மூக்கொழுகல் அல்லது மூக்கடைப்பு போன்றவை ஓமைக்ரான் வைரஸ் இருப்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். இந்தியாவில் ஓமைக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பலருக்கும் இந்த குளிர் காலத்தில் தொண்டை கரகரப்பு, கட்டு, சளி, இருமல், மூக்கடைப்பு, ஜுரம் போன்றவை இருப்பது சகஜம், ஆனால் இவர்கள் தங்களுக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்வது அவசியமா என்ற கேள்வி எழுகிறது.
இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த மசீனா மருத்துவமனை மார்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுலைமான் லதானி ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “ஓமைக்ரான் கேஸ்களில் நாங்கள் ஒரு கேசில் கண்டது என்னவெனில் தொண்டை கரகரப்பு ஆகும். ஆனால் வெறும் தொண்டை கரகரப்பு ஏற்பட்டாலே ஓமைக்ரான் இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஆனால் நீங்கள் பயணம் செய்து விட்டு திரும்பிய நபருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு தொண்டை கரகரப்புடன் தொண்டை கட்டு, சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி சேர்ந்து இருந்தால் நீங்கள் கோவிட் பரிசோதானை செய்து கொள்ளத்தான் வேண்டும்.
வெறும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, செருமல் இருந்தால் அது ஓமைக்ரான் என்று அஞ்சத்தேவையில்லை. அது சீசனல் ஃப்ளூவாகக் கூட இருக்கும் பயப்பட வேண்டியதில்லை” என்றார்.
டெல்டா வேரியண்டை விட ஓமைக்ரான் அதிவேகமாகப் பரவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இரண்டு டோஸ்கள் வாக்சின் போட்டுக்கொண்டவர்களுக்கு ஓமைக்ரானின் மிகவும் மிதமான அறிகுறிகளே ஏற்படுகின்றன.

“ஓமைக்ரான் தொடர்பான அறிகுறிகள் மிதமானவை. தொண்டை பிரச்சனை, பசியின்மை, பொதுவான ஒரு பலவீனம், இருமல், சளி, மூச்சு விடுதலில் சிரமம். வாசனை, ருசி காணாமல் போதல் போன்ற கொரோனாவின் பிரதான அறிகுறிகள் ஓமைக்ரான் தொற்று உள்ளவர்களிடத்தில் காணப்படவில்லை. எனவே பயணம் இல்லையெனில் சாதாரண அறிகுறிக்கெல்லாம் டெஸ்ட் எடுக்க வேண்டிய தேவையில்லை. ” என்று இன்னொரு மருத்துவ நிபுணர் டாக்டர் கோபிகிருஷ்ணா என்பவர் அதே ஆங்கில ஊடகத்துக்குக் கூறியுள்ளார்.

தொண்டை பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு வெந்நீர் குடுப்பது, உப்புக்கரைசல் தண்ணீரால் காகிள் செய்வது ஆகியவை போதும். ஆனால் பொதுவான பாதுகாப்பு அம்சங்களான சமூக இடைவெளி, முகக்கவசம் முறையாக அணிதல் கையை சானிட்டைசர் போட்டு அடிக்கடி அலம்புதல் வாழுமிடத்தில் நல்ல காற்றோட்டமாக வைத்திருத்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்ற அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்கின்றனர் நிபுணர் குழு.

Share on

மருத்துவம்

peoplenews lka

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!...

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது... Read More

peoplenews lka

குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்....

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்... Read More

peoplenews lka

சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்...

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் போது மீட்கப்பட்ட அதிசயிக்க வைக்கும் சிறுநீரக கல்.. Read More

peoplenews lka

பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?...

கொவிட் தடுப்பூசி - பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?.. Read More