அமேசான் வனப்பகுதியில் விமானம் விபத்து ; 5 பேர் பலி

அமேசான் வனப்பகுதியில் விமானம் விபத்து ; 5 பேர் பலி

பிரேசில் நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணம் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு நேற்று (15) சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர்.

அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தரையில் விழுந்த சில விநாடிகளில் விமானம் முழுவதும் தீ பற்றி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அர்மின் ஸ்பிரிங்ஸ் என்ற தொழிலதிபர் அவரது 2 பேரன்களும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )