குமார் வெல்கம மற்றும் ஏ.எச்.எம் பௌசி ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
பத்தரமுல்ல வோட்டர்சேஜ் ஹோட்டலில் “இலங்கையால் முடியும்” என்ற தொனிப்பொருளில் விசேட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 34 கட்சிகள் கையொப்பமிட்டனர்.
குறித்த இருவரும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுடைய ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துக்கொண்டனர்.
CATEGORIES Sri Lanka