ஹிருணிகாவுக்கு பதவி கோருகிறது பெண்கள் அமைப்பு !
தேசியப்பட்டியலிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பதிலாக இளைஞர்களின் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியுடனான பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் பாராளுமன்ற ஆசனங்கள் பறிக்கப்பட்டதுடன், ஹரின்
பெர்னாண்டோவின் தேசியப்பட்டியல் ஆசனம் தற்போதுவரை வெற்றிடமாகவே உள்ளது.
இதற்கு ஹிருணிகாவை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள்சக்தி தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.