வரம்பை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வரம்பை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

தேர்தல் பிரசார செலவு வரம்பை மீறும் அளவுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான எந்தவொரு விதிமீறல்களையும் பொலிஸாரிடம் தெரிவிக்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரச் செலவுகள் தொடர்பான புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்டும் அசாதாரண வர்த்தமானி ஒன்று முன்னதாக வெளியிடப்பட்டது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )