37 புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரங்கள்

37 புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரங்கள்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 37 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் மதுவரித் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவற்றில் 16 அனுமதிப்பத்திரங்கள் சிறப்பு அங்காடிகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர முன்வைத்த கேள்விக்கு பதிலளித்து கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )