முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து இளைஞர்களை தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும் !
முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து இளைஞர்களை தூண்டி விடுவதை அநுர குமார நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் முஸ்லிம் பிரதேசங்க ளில் இடம்பெற்ற கூட்டங்களில் அநுரகுமார சஜித் பிரேமதாச தொடர்பாக சிறு பிள்ளைத்தனமான விமர்சனங்களை முன்வைத்தார்.
திகன, மினுவாங்கொடை கலவரங்களின் போது சஜித் பிரேமதாச என்ன செய்தார் என கேட்டிருந்தார்.
எனினும் அவர் இதனை புரிந்துகொள்ள வேண்டும் அப்போது சஜித் இந்நாட்டின் ஜனா
திபதியோ, பிரதமரோ, எதிர்கட்சி தலைவரோ அல்லது உங்களை போன்று ஒரு கட்சியின் தலைவரோ அல்ல.
அவர் வீடமைப்பு அமைச்சர் மட்டுமே அந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட மினு
வாங்கொடை, குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்த 21 பள்ளிவாசல்களின் புனர்நிர்மாணத்துக்கு சஜித் பிரேமதாச அவர்களே நிதியுதவி செய்திருந்தார்.
அந்த நிகழ்வுகளில் சஜித் பிரேமதாசவுடன் நானும் முஜிபுர் ரஹ்மானும் கலந்துகொண்டிருந்தோம்.
அதன்பின்னர் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இது தொடர்பாக குரல் எழுப்பியிருந்தோம்.
தெற்காசியாவின் செல்வந்த கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ரூபா வழங்கி இருப்பாரா?
ஜனாஸா எரிப்பின் போது முழு முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து வீதியில்
இறங்கி போராடியது.
எம்முடன் தமிழ், சிங்களசகோ தரர்கள் இணைந்து போராடினார்கள்.
அப்போது எங்கே சென்றார் இந்த அநுர குமார?
ஆனால் முஸ்லிம்களோடு அனைத்து சந்தர்ப்ப ங்களிலும் ஒன்றாக இருந்தவர் சஜித் பிரேமதாச யாரையும் விமர்சனம் செய்யலாம்.
ஆனால் அதில் சிறிதளவாவது உண்மை இருக்க வேண்டும்.
விமர்சனம் செய்ய முன்னர் உங்களையும் சுய விமர்சனம் செய்துவிட்டு விமர்
சிக்க வேண்டும். ஆகவே முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து பொய்களை கூறி முஸ்லிம் இளைஞர்களை தூண்டி விடுவதை அநுர குமார நிறுத்த வேண்டும் என அவர்
தெரிவித்தார்.