சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் குறித்து அதிக முறைப்பாடுகள் பதிவு

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் குறித்து அதிக முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கு இதுவரை 435 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் சட்டவிரோத தேர்தல் பிரசார
நடவடிக்கைகள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளன என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகக் கபே அமைப்பு, 25 மாவட்டங்களிலும் 25 மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் 160 நீண்டகால கண்காணிப்பாளர்களைக்
கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளது.

தேர்தல் பிரசார நிதியைக் கண்காணிப்பதற்காக 40 தேர்தல் தொகுதிகளில் 40 நீண்டகால கண்காணிப்பாளர்களை நிறுவி தேர்தல் பிரசாரத்துக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் செலவு செய்கின்ற செலவு தொடர்பிலான கண்காணிப்பை கபே அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், தேர்தல் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளனர் என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )