`அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..!’

`அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..!’

“அம்மா” என்ற சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம். 
அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல, அது அன்பின் தொடர் ஊற்று.

“தாயிற்சிறந்த கோயிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக் கூறுகின்றன

பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழி நடத்திச் செல்லும் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில் மிளிர்ந்தாலும், அன்னைக்கு ஈடாக எதுவுமேயில்லை.

அத்தகைய அன்னையை போற்றும் விதமாக கொண்டாடப்படுவதே இந்த அன்னையர் தினம்.

1908 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் என்ற அமெரிக்கப் பெண்மணி, தனது தாயின் தியாகத்தையும், பண்புகளையும், அவர் காட்டிய நிபந்தனை இல்லாத அன்பையும், உதாரணமாக வைத்து, அன்னையர் தினத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

1914 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

பூமி தாங்கும் முன்னே, நம்மை பூவாய் தாங்கியவள் எம் அன்னையர்களுக்கு  சார்பாக அன்னையர்தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கினறோம் ..!

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )