போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானம்

போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானம்

கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக  அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு  பிரிவு  அறிவித்துள்ளனர்.

மேலும், ”தபால் மூலம் பார்சல் கிடைத்துள்ளதாகவும் முகவரி தெளிவின்மை காரணமாக அதனைத் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாகவும்  எனவே, அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கையடக்கத்தொலைபேசிகளுக்கு போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் ஊடாக  மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளின் மூலம் மக்களிடம் பணம் பெறுவதற்காக மக்களின் இரகசிய தகவல்களை பெற்று பண மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்” என அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )