இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகள் நீக்கம்

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகள் நீக்கம்

20 ஆண்டுகளுக்கும் மேலான இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தன்சானியா அரசு.

​​இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனகநாதன், தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை இனி இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் இலங்கை வணிகர்கள் மற்றும் பயணிகள் இப்போது தன்சானியாவிற்கு இணையவழி மூலம் நிலையான விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், சுமார் 450 இலங்கை வணிகர்கள், மாணிக்கக்கல் மற்றும் கல் வர்த்தகர்கள் உட்பட ஏனைய பயணிகளுடன், இப்போது இணையத்தில் நிலையான விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என கனநாதன் கூறியுள்ளார்.

தன்சானிய அரசுடன் விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இலங்கையை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கி வணிக மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக சுமூகமான பயணத்தை எளிதாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )