இன்று உலக தந்தையர் தினம் !
எந்தவொரு குழந்தையும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் சூப்பர் ஹீரோ அவர்களின் அப்பா தான் .
ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கின்றார்.
கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை.
ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாகின்றார்.
தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகமாகும்.
இந்த உலகில் ஒவ்வொரு பிள்ளையினதும் மிகச்சிறந்த நண்பன் யாரென்றால் அது அந்த பிள்ளையின் தந்தை தான்.
அப்பா …..என்ற சொல்லில் அத்தனை அர்த்தங்கள்!
தன் பிள்ளையை கருவில் சுமப்பது தாயென்றால் , தோல்மீது சுமப்பது தந்தை தான்!
எவ்வித இடையூறும் இன்றி தன் பிள்ளை வரள வேண்டும் என மார்போடு அணைத்து தாய் அரவணைக்கிறாள் .
ஆனால், தன் பிள்ளை இந்த உலகத்தையே பார்க்க வேண்டும் என்று தன் பிள்ளையை தோள் மீது சுமக்கிறார் தந்தை
அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த 1910ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி அமெரிக்காவின் ஸ்பாகெனில் நகரில் சோனோரா ஸ்மார்ட் டாட் என்பவரின் முயற்சியால் தந்தையர் தினம் முதன் முதலாக அனுசரிக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் வெவ்வேறு தினங்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாறு தந்தையர் தினம் கொண்டாடப்படும் தினம் வித்தியாசப்பட்டாலும் தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமானதும் பெறுமதியானதுமான நாளாகும்!
தான் அனுபவித்த எந்தவொரு இன்னலையும் தன் பிள்ளை படக்கூடாதென்பதில் எப்போதும் விழிப்பாய் இருப்பவர் தான் தந்தை
ஒன்றின் பெறுமதியை அதனை இழந்த பின்னர் உணர்வதே மனித இயல்பு
எனவே, தந்தையின் பெறுமதியை அவரது வாழ்நாளில் உணர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் செயற்பட வேண்டும்.
முதுமைக்காலத்தில் தந்தையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு உடலும், உள்ளமும் உறவுகளுடன் உரையாட, பாசத்தில் நனைய நினைக்கும்போது அவற்றை அவர்களுக்கு வழங்கி இருக்கிறோமா? தள்ளாத வயதில் அவர்களுக்குரிய அனைத்து கடமைகளையும் செய்கிறோமா? என்ற கேள்வியை நம்முன்னே கேட்டு பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற் பணியாகும்.
அப்பா என்பவர் என்றைக்கும் சுவாரசியமான புத்தகம் தானே. சிலர் படித்து பாடம் பெறுகிறார்கள். இன்னும் சிலரோ படிக்கத் தவறி அவரை இழந்த பின்பு இன்னும் படித்திருக்கலாம், வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்க்க இன்னும் சில படிப்பினைகளை அப்புத்தகத்திலிருந்து கற்றுத் தெரிந்திருக்கலாம் என வருந்துகிறார்கள்
இருப்பவர்கள் உணர்வதில்லை! இழந்தபின் வாடி பலனில்லை!
குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கும் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள் !