மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு !

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு !

பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான ரயில்  சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (16) காலை கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்ட விபத்தால் அந்த ரயில் தற்போது  கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

கனேமுல்ல – புலுகஹகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிக்கிரிமெனிக்கே புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி நேற்று (15) புறப்பட்டு வந்த புகையிரதம் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோககி வரும் புகையிரதங்கள் ஹட்டன் புகையிரத நிலையம் வரையும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதங்கள் நானுஓயா வரையும் மட்டுப்படுத்தப்பட்டு பஸ் ஊடாக பயணிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த புகையிரதத்தினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகள் புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் இன்று காலை வரை வழமைக்கு திரும்பவில்லை.

இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )