கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந் நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்க கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ்  உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸின் வேண்டுகோள் செவ்வாய்க்கிழமை விவாதத்தில் அவர் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டுகிறது. அதை சரி செய்வதற்கான மீண்டும் ஒரு விவாதத்தை எதிர்நோக்குகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )