நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை (18) அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மருத்துவப் பணிப்புறக்கணிப்பு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளிகளின் சிகிச்சை தடைபடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊவா மாகாண இணைப்பாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக முறையான முறைப்பாடு இன்றி நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய சுகாதார அமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் சாதகமான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால், மத்திய நிலையத்தின் கூட்டத்தின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )