இட்லி, தோசைக்கு சூப்பர் கோமினேஷன் ; கொய்யா சட்னி

இட்லி, தோசைக்கு சூப்பர் கோமினேஷன் ; கொய்யா சட்னி

இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி செய்யலாமா? அல்லது புதினா சட்னி செய்யலாமா? என்ற குழப்பம் எல்லா பெண்களுக்கும் இருக்கும்.

இந்த இரண்டுமே வேண்டாம்! வித்தியாசமாக கொய்யா சட்னி செய்து கொடுங்களேன்.

கொய்யா சட்னி எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொய்யா காய் – 3
  • பச்சை மிளகாய் – 2
  • எலுமிச்சைப் பழம் – 1
  • கொத்தமல்லி – ஒரு கொத்து
  • சீரகம் – அரை கரண்டி
  • இஞ்சி – சிறிய துண்டு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கொய்யா காய்களை நன்றாக சுத்தம் செய்து சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

தொடர்ந்து இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தமாக்கி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

பின் அதே மிக்ஸி ஜாரில் வெட்டி வைத்துள்ள கொய்யாக் காய், சீரகம், கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை நன்றாக அரைக்கவும்.

அரைத்து வைத்துள்ள இந்த சட்னியில் தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்தால் சூப்பரான கொய்யா சட்னி ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )