ஹேக் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம்

ஹேக் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம்

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் யூடியூப் சேனலை, ரிப்பிள் என்ற பெயரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்து விளம்பரப்படுத்தப்படும் தகவல்கள் தற்போது இடம்பெற்றுள்ளன.

அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நேரலை பாதிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )