தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார்

தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (29) பதவியேற்ற பின்னர், முதல் துணை முதல்-அமைச்சர் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் கைவசம் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையுடன் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )