கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : உரிமையாளர் உட்பட இருவர் கைது !
கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொலமன் பீரிஸ் மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்புரேகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய உரிமையாளரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.