7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதுளை, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை, ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களைக் கோரியுள்ளது.